மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*’மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!’*
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி 1880.
இந்த ஹதீஸின் அரபி மூலத்தில் *தாவூன்( الطَّاعُونُ)* என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது .
தாவூன்( الطَّاعُونُ) என்பது பிளேக் நோயை மட்டுமே குறிக்கும் மற்ற ஹதீஸ்களில் மரழ் *( مَرَضٌ ) நோய் என்றே வந்துள்ளது.
பிளேக் நோய் மட்டுமே நுழையாது என்றே முந்தய பல அறிஞர்களும் முன்பே விளக்கியுள்ளனர். ஆங்கில மொழிபெயர்ப்பில் இதை உணர்ந்து சரியாக பயன்படுத்தியுள்ளனர்.
நாமும் தேடிப்பார்த்த வகையில் பிளேக் நோய் மதீனாவிற்கு இதுவரை வந்ததில்லை என்பது இந்த நபிமொழியை உண்மைபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
*الله اعلم*