திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5)
கேள்வி : நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?
பதில்: பிர்அவ்னின் மனைவி & இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (குர்ஆன் 66:11 & 12)
கேள்வி : உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
பதில்: அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
(குர்ஆன் 13:28)
கேள்வி: நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?
பதில்:
A) குழந்தையில் பேசியது,
B) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல்,
C) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல்,
D) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல்,
E) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் ,
F) பிறர் உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல்
(குர்ஆன் 3:49 & 5:110)
கேள்வி: சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
பதில்: 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (குர்ஆன் 20:118,119)
கேள்வி: வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
பதில்: எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
(குர்ஆன் 42:43 &,31:17 & 3:186)
கேள்வி: தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
பதில்: ஸகர் என்ற நரகம் (குர்ஆன் 74:41,42,43)
கேள்வி: ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?
பதில்: ஆது சமூகத்தாருக்கு. (குர்ஆன் 69:6,7)
கேள்வி: முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது?
பதில்: ‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்: இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு’ (குர்ஆன் 24:23)
கேள்வி: குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரும் வானவர்கள் பெயர் என்ன?
பதில்: மாலிக் (அலை) , மற்றும் மீக்காயீல (அலை) (குர்ஆன் 43:77 & 2:98)