கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…?
கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்திருப்பதாக புகாரி,முஸ்லிம் போன்ற நூற்களில் நபிகள் நாயகத்தின் பெயரால் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது…!
நபி(ஸல்) அவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் செய்தி குர்ஆனுடன் முரண்படாமல் இருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற அந்தஸ்திற்கு வரும்.
குர்ஆன் எப்படி அல்லாஹ்விடமிருந்து வஹீயாக வந்ததோ அது போல ஹதீஸ்களும் குர்ஆனுக்கு விளக்கமாக இறங்கியது தான்.நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்துமே ஹதீஸ்களாகும்…!
எனவே நபியவர்கள் ஹதீஸ் ஒருக்காலும் குர்ஆனுடன் முரண்படாது..!
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாட்டைக் கண்டிருப்பார்கள்.123
திருக்குர்ஆன் 4:82
குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே நபி(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்…!
அல்லாஹ் கூறுகிறான்…!
بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ ۗ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.105 நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!150 மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,255 அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.26
திருக்குர்ஆன் 16:44
எனவே நபியவர்களின் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது..அப்படி ஒரு செய்தி எந்தவித விளக்கமும் கொடுக்க முடியாத நிலையில் குர்ஆனுடன் முரண்பட்டால் குர்ஆனை மறுத்து ஹதீஸை ஏற்றுவிடாமல்..அது சரியான ஹதீஸ் இல்லை..,நபி(ஸல்) அவர்கள் அப்படிக் கூறவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்…!
கருஞ்சீரகத்தில் மரணத்தை தவிர அனைத்து நோய்க்கும் மருந்திருப்பதாக மேற்கண்ட செய்தி கூறுகிறது.இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஹதீஸின் கருத்து குர் ஆனின் உண்மைத் தன்மைக்கு மாற்றமாக இருக்கிறது…!
அல்லாஹ் கூறுகிறான்…!
المر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ ۗ وَالَّذِي أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ الْحَقُّ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ
அலிஃப், லாம், மீம், ரா.2 இவை இவ்வேதத்தின் வசனங்கள். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்ட உண்மை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன்
وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا
அல்லாஹ்வைவிட அதிக உண்மை பேசுபவன் யார்…?
அல்குர்ஆன்(4:87)
மேற்கண்ட வசனங்கள் அல்லாஹ்வின் கூற்று ஒருக்காலும் பொய்யாகாது என்பதை பிரகடனப்படுத்துகிறது…!
ஆனால் மேற்கண்ட செய்தி பொய்யாக இருக்கிறது..கருஞ்சீரகம் என்பது ஒரு பொருள்..அது மறைவான விஷயம் அல்ல..கருஞ்சீரகத்தை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அதில் குறிப்பிட்ட சில நோய்கள் தவிர மற்ற நோய்களுக்கு மருந்து இல்லை..எனவே இந்த செய்தி குர்ஆனுடன் முரண்படுவதால் பலவீனமான செய்தியாகும்…!