பலவீனமான செய்தி
______________
1536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.
1 . ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை.
2 . பயணியின் பிரார்த்தனை.
3 . அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
______________
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْوَالِدِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْمَظْلُومِ
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஜஃபர் அறியப்படாதவர் ஆவார். இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் முஹம்மது பின் அலி பின் ஹுஸைன் என்று கூறுகின்றார். ஆனால் இப்னு ஹஜர்
அவர்கள் இதை மறுத்து முஹம்மது பின் அலி பின் ஹுஸைன் அபூஹுரைரா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இவர் வேறு நபர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 4/502 )
இந்த செய்தியை ஷுஐப் அவர்கள், ஹஸனுன் லிகைரிஹீ என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்பானீ அவர்கள், இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்தியின் மூலம் (ஷாஹித் என்ற அடிப்படையில்) மேற்கண்ட செய்தியை ஹஸனுன் லிகைரிஹீ என்று குறிப்பிட்டுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-596)
இப்னு ஹஜர் அவர்கள், மேற்கண்ட அபூஜஃபர் என்பவரையும், உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸைத் என்பரையும் மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
