ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு உதவிக்காக வந்திருந்தார். அவர் உதவியைப் பெற்றுக்கொண்ட பின், நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமக்கு கணவர் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துக் கொள்கிறாய் என்பதில் கவனமாக இரு! ஏனென்றால் அவர்தான் உனது சொர்க்கமாகும்; உனது நரகமுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)