அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே?
தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.
(நூல்: முஸ்லிம் 2137)
ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான்.