*தூய உள்ளம்*
*அனைத்துச் செயல்களும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன* என்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு காரியத்தையும் மறுமையில் இறைவனிடம் நற்கூலியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டும்.
ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அதற்கும் நமக்காக நன்மை பதிவு செய்யப்படும். எனவே எந்நேரமும் நமது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த வகையிலும் தீமையான எண்ணங்களை, நோக்கங்களை குடியேற விடாமல் விழிப்புடன் வாழ வேண்டும். இவ்வாறு, *தீய உணர்வுகளை சிந்தனைகளை தவிர்த்து விட்டு உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்பவர்கள், மக்களில் உயர்ந்தவர்கள்* என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
நபி (ஸல்) அவர்களிடம் *மக்களில் சிறந்தவர் யார்?* என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் *உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர்* என்று பதிலளித்தார்கள்.
அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் *தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்?* என்று வினவினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் *தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது* என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : இப்னு மாஜா 4206