வாரிசுரிமை சட்ட வசனம் இறக்கப்படல் இறங்கிய போது
ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் அவர்களும் (எனது) பனூசலமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத்) தங்கியிருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) எதையும் விளங்க முடியாமல் இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ செய்து என் மீது தெளித்தார்கள்.
நான் மூர்ச்சை தெளிந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்! என்று கேட்டேன்.
அப்போது தான் அல்லாஹ் உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்:
ஓர் ஆணிண் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச்சமமானது. (இறந்து போன வருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இருபங்கு அவர்களுக்குரியதாகும். ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்)பாதி அவளுக்குரிய தாகும்.
இறந்து போனவருக்குக் குழந்தைகள் இருப்பின் அவருடைய பெற்றோரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு.
அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்.
அவருக்கு சகோதர சகோதரிகளுமிருந்தால், தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள்.
இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரணசாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான்(சொத்துகள் பங்கீடு செய்யப்பட வேண்டும்).
உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான்.
திண்ணமாக அல்லாஹ்(உண்மை நிலைகள் யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்த வனாகவும் இருக்கின்றான் (ஆகையால், அவன் நிர்ணயித்த பிரகாரமே பாகப் பிரிவினை செய்து கொள்ளுங்கள்) என்னும் (4:11-ஆம்) வசனம் இறங்கியது.
தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ர் தொழுதார்கள்.
பிறகு பாங்கு சொல்பவர் ளதொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டுத்ன தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.
(புகாரி 4577)
(புகாரி 194)
‘நான் நோயுற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயநிலையில் இருந்தேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கத்திலிருந்து (தெளிந்து) உணர்வு பெற்றேன்.
அப்போது நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்கு வாரிசு யார்? என்னுடன் உடன் பிறப்புகள் மட்டுமே எனக்கு வாரிசாகும் நிலையில் நான் உள்ளேனே?’ என்று நான் கேட்டபோது பாகப்பிரிவினை பற்றிய (திருக்குர்ஆன் 04:176-வது) வசனம் அருளப்பட்டது’ என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
”(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”