*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*
*வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்* என்று அவர்கள் கூறினர். அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம்.
*முஸ்லிம்களின் ஒரு வீட்டைத் தவிர வேறு எதையும் அங்கே நாம் காணவில்லை.*
*துன்புறுத்தும் வேதனை பற்றி அஞ்சுவோருக்கு அங்கே சான்றை விட்டு வைத்தோம்.*
மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது,
அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். *இவர் சூனியக்காரரோ, பைத்தியக்காரரோ* எனக் கூறினான்.
எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். *அவன் இழிந்தவனாக இருக்க அவர்களைக் கடலில் வீசினோம்*.
ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. *அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம்.*
அது எப்பொருளில் பட்டாலும் *அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.*
ஸமூது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. *குறிப்பிட்ட காலம் வரை அனுபவியுங்கள்!* என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர்.
எனவே *அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடி முழக்கம் தாக்கியது. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை.*
முன்னர் *நூஹுடைய சமுதாயத்தையும் (அழித்தோம்) அவர்கள் குற்றம் செய்யும் கூட்டமாக* இருந்தனர்.
[அல்குர்ஆன் 51:32-46]