\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\
பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும்
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَرْبِ بْنِ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ، أَنَّ مَوْلَى الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ الزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ دَبَّ إِلَيْكُمْ دَاءُ الأُمَمِ قَبْلَكُمُ الْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ لاَ أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلاَ أُنَبِّئُكُمْ بِمَا يُثَبِّتُ ذَاكُمْ لَكُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ ”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட *பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.*
அறிவிப்பவர் ஜூபைர் பின் அவ்வாம் (ரலி).
நூல் : திர்மிதீ 2434
இந்தச் செய்தி அஹ்மத் 1338 மற்றும் முஸ்னது பஸ்ஸார் 2232, முஸ்னது அபீயஃலா 661 உள்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் *யயீஷ் பின் வலீத்* என்பாருக்கு ஜூபைரின் அடிமை அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது.
அவர் *யாரென்று அறியப்படாதவர் ஆவார். அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்னவென்று உறுதி செய்யப்படாததால்* இது ஏற்கத்தக்க செய்தியல்ல.
ஃபைளுல் கதீர் எனும் புத்தக ஆசிரியர் மனாவீ இந்தக் காரணத்தைக் குறிப்பிட்டு இந்த ஹதீஸை குறை கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பார்க்க ( பைளுல் கதீர் பாகம் 3 பக்கம் 516)
முஃஜமுஸ் ஸஹாபா பாகம் 1 பக்கம் 223 எனும் நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதில் *பஹ்ர் பின் கனீஸ், உஸ்மான் பின் மிக்ஸம் என்பவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் இவர்களை பல அறிஞர்களும் பலவீனமானவர்கள்* என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் சில அறிவிப்புகளில் (முஸ்னது ஷாஷி ஹதீஸ் எண் 52), யயீஷ் பின் வலீத் நேரடியாக ஜூபைர் அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும் உள்ளது. ஆனால் யயீஷ் என்பார் ஜூபைர் அவர்களின் காலத்தை அடையவில்லை. எனவே இது ஆதாரப்பூர்வமானதல்ல.
மேலும் இதை கருத்தை கொண்ட செய்தி இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் அறிவிப்பதாக இப்னு அதீ எனும் அறிஞரின் அல்காமில் (பாகம் 4 பக்கம் 198) எனும் நூலில் உள்ளது.
இதில் *அப்துல்லாஹ் பின் அராதா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்*.
(பார்க்க தக்ரீபுத் தஹ்தீப் பாகம் 1 பக்கம் 314