*மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம்.* இதற்கு *அல்லாஹ் கூறும் வழிமுறையை* மறக்கின்றோம்:
அல்குர்ஆன் 2: 152-153
————————————
நீங்கள் என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.
எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.~~~~~
ஹதீஸ்: ஸஹீஹுல் புகாரி: 7405.
————————————————-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.
அவன் என்னைத் *தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் * நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன்.
அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்.
அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன்.
அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன்.
அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.