கைகூப்பி கும்பிடுவது கூடுமா❓
மரியாதைக்கும் வணக்கத்துக்கும் வேறுபாடு என்ன?
நபி வழியில் மரியாதை செலுத்துவதற்கும் (பெரியவர் வரும் போத எழுந்திருத்தல் உள்பட) வணங்குதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மரியாதை செலுத்துவதற்கு உலகில் பல விதங்கள் உள்ளன. அவை அனைத்துமே மரியாதைக்குரியவர்களை புனிதப்படுத்தும் வகையிலும் அவர்கள் மனித தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சித்தரிக்கும் அடிப்படையிலும் தான் உள்ளன.
கை கால்களைத் தொட்டு முத்தமிடுதல், கால்களில் விழுதல், எழுந்து நிற்றல், கடவுளுக்காகச் செய்யும் வணக்க முறையாக எதைக் கருதுகிறார்களோ அதைச் செய்வது (உதாரணம் கும்பிடுதல்) இப்படித்தான் உலகில் மரியாதை செய்யப்படுகிறது. இந்த மரியாதை தான் பின்னர் அவர்கள் கடவுளாகக் கருதப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
ஆனால் இஸ்லாத்தில் மரியாதை என்பது அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்வதும் அவர்களின் கட்டளைகளில் நல்லவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதும் தான்.
இத்தகைய மரியாதையால் ஒருவருக்கு கடவுள் தன்மை வராது. ஒருவர் இறந்த பின் நமக்குக் கட்டளை போட மாட்டார் என்பதால் அவரது இறப்புக்குப் பிறகு கூட அவர் கடவுளாக்கப்பட மாட்டார்.
இது ஒரு மாற்றுமத கலாச்சாரமும் கூட..
யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பது நபிவழி
உணர்வு வார இதழ்