*பொருளாதார வசதியை வைத்து தான் குர்பானி பிராணி ஒட்டகமா ? மாடா? ஆடா ? அல்லது கூட்டு குர்பானி யா என்பதை நிர்ணயிக்க வேண்டுமா❓*
ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். *ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்’* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்..
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7288
*எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்* (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
எனவே குர்பானியை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை.
எனவே ஒருவர் தனது பொருளாதாரத்தை வைத்து தன்னால் இயன்ற அளவுக்கு தனிப்பட்ட முறையில் ஒட்டகத்தை,மாட்டை,ஆட்டை அல்லது ஒட்டகம் மாடுகளில் ஏழு நபர்கள் கூட்டாக இணைந்து குர்பானி கொடுக்கலாம்.
எதை அவர்கள் இறையச்சத்துடன் செய்த போதிலும் அல்லாஹ் குறைவின்றி நன்மைகளை தர அல்லாஹ் போதுமானவன்.
—————-
*ஏகத்துவம்*