என்றும் இறை நினைவில்
—————————————————-
நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு கிராமவாசிகள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் முஹம்மது அவர்களே! மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் யாருடைய ஆயுட்காலம் நீடித்து, அவருடைய செயல்களும் மிக நல்லதாகி விட்டதோ அவர்தான் எனப் பதிலளித்தார்கள்.
மற்றொருவர் இஸ்லாத்தின் (சுன்னத்தான) சட்டங்கள் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. எனவே (அனைத்து நன்மைகளும்) ஒருங்கிணைந்த, தொடர்ச்சியாக நாங்கள் செய்யும் வகையிலான (எளிமையான) ஒரு நற்காரியத்தைக் கூறுங்கள்! எனக் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகைத்தவனும் கண்ணியமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் நினைவில் நனைந்ததாக (திளைத்ததாக) உனது நாவு இருந்து கொண்டே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூல்: அஹ்மத் (17716)
———————————————-
ஏகத்துவம்