தர்மம்– صدقة
————————
//தர்மம் செல்வத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது//
————————————————-
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்
அல்குர்ஆன் : 2:268
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
முஸ்லிம் 5047
//தர்மம் நரகத்திலிருந்து பாதுகாக்கும்//
————————————————-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1417
//சிறந்த தர்மம்//
————————-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1426
நேர்மையான வருமானம் மூலம் தர்மம் செய்தல்
—————————————
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1410
//சொர்க்கத்தின் ஸதகா வாசல்//
————————————————
தர்மம் செய்தவர்கள் ஸதகா‘ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஹதீஸின் சுருக்கம்)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1897
//அர்ஷின் நிழலில் அறம் செய்தவர்கள்//
—————————
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 660
நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்.
[அல்குர்ஆன் 3:92]
மரணம் வரும் முன் அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளிலிருந்து ஸதகா (தர்மம்) செய்வோம். இன்ஷா அல்லாஹ்
———————-
ஏகத்துவம்