உழைப்பவருக்கு உடனே கூலி கொடுக்க வேண்டுமா என்ற நபிமொழி ஸஹீஹானதா?
நபி(ஸல்) கூறினார்கள்:
தொழிலாளி வியர்வை சிந்தும் முன் அவர்களது கூலியை கொடுத்து விடுங்கள் .
குறிப்பிட்ட ஹதீஸ் பலவீனமானது:
இப்னு மாஜா வின் அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் என்பவர் ஹதீஸில் பலவீனமானவர்
இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனனுஸ் ஸுஹ்ரா வில் சுவைத் பின் ஸஈத் இவரைப்பற்றி ஒருசிலர் அதிகமாக தவறு விடக்கூடிய உண்மையாளர் என்று குறிப்பிட்டாலும் இவர் பலவீனமானவரே.
இமாம் தபரானீயின் அல்முஃஜமுஸ் ஸகீர் இல் வலீத் பின் ஹுஸைன் மற்றும் முஹம்மத் பின் ஸியாத் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீஸை ஆய்வு செய்து பார்க்கின்ற போது “பைஹகீ” யின் அறிவிப்பில் வரக்கூடிய அறிவிப்பாளரான சுவைத் பின் ஸஈத் என்பவரை மேலோட்டமாக வைத்தே ஒருசிலர் ஸஹீஹானது என்ற தீர்மானத்திற்கு வருகின்றார்கள்.
என்றாலும் அவரைப்பற்றி அதிகமாக தேடிப்பார்க்கின்றபோது அவரை பெரும்பான்மையானவர்கள் குறைகூறியுள்ளதை கண்டுகொள்ளலாம்.
அந்த அடிப்படையிலேதான் இந்த ஹதீஸ் பலவீனமானது.