*முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்*
*என்னிடம் ஒரு இந்து சகோதரன் இந்த கேள்வியை கேட்டார்.*
(அந்த சகோதரன் இன்னும் கலிமா சொல்லவில்லை. ஆனால் இஸ்லாத்தை நேசித்து வருகிறார்)
*நான் கற்சிலையை கடவுளாக ஏற்க்கவில்லை. ஒரு கடவுள் இருக்கிறான்* என்று ஆழமாக நம்புகிறேன். ஆனால் வீட்டில் பொங்கல், தீபாவளி என்ற விசேசம் வரும் போது சாமி கும்பிட அழைக்கிறார்கள். அப்போது நான் என்ன செய்வது?
*ஒரு கடவுளுக்கு இணையாக இன்னொறு கடவுளை ஏற்ப்படுத்திய குற்றம் வருமே? அந்த விழாவை புறக்கணிக்க வேண்டுமா?* என்று கேட்டார்.
*(அவருக்கு குர்’ஆன் ஹதீஸ் வழியில் பதில் அளிக்கப்பட்டது)*
*ஆனால் பரம்பரை முஸ்லிம் என்று மார் தட்டும் நம்மவர்கள் MLA,MP சீட்டுக்காக பொங்கல் வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து, மேரி கிருஸ்த்துமஸ் வாழ்த்து, ஏசு நீரோடை சீடி* *விழாவில் கலந்து கொள்ளுதல்,*
*பரிணாமம் பெற்று பொங்கல் கொண்டாடுவோம்* என்று சொல்லுவது வேதனையாக உள்ளது.?
இஸ்லாத்தை அறிந்து கொள்ள கூடிய நபருக்கு இருக்க கூடிய *இறையச்சம்* கூட இவர்களுக்கு இல்லையா?
*நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்*. அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.*(5:54)
*அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.* (4:140)
—————————
*ஏகத்துவம்*