எலிகள் ஏற்படுத்தும் தீய விளைவுகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6295
இரவில் தூங்கும் போது எலி ஏற்படுத்தும் எதிர்விளைவைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் போடுகின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும் என்ற சட்டத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கேஸ் சிலிண்டர் வெடித்து எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. ஒருவர் இரவில் தூங்கச் செல்லும் போது கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் பின்விளைவைக் கவனிக்க வேண்டும்.