உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை
குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 4982, 51115
குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 2798
குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 4581, 4748