ஷாபான் மாதம் பிறை 15 அன்று பராஅத் இரவு என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு ஆதாரம் என்ன ?
இந்த நாளில் இதற்கென்று சிறப்பு தொழுகை தொழுவது, ஃபாத்திஹா ஓதுவது, யாஸீன் ஓதுவது, ரொட்டி சுடுவது… இதற்கெல்லாம் ஆதாரம் என்ன ?
குர்ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? அல்லாஹ்வுடைய தூதர் காட்டித் தந்தார்களா ?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”நான் கூறாத ஒன்றை கூறினார்கள்” என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என ஸலமா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி 109
(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: நஸயீ 1560
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரிகள் இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடையக்கூடிய மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!.
♊ஷபே பராத் (ஷஃபான் 15) குறித்த தவறான கருத்துகள் மற்றும் அதற்கான விடைகள்♊
❌தவறான கருத்து 1:
இந்த இரவில், நம் பாவங்களை மன்னிப்பதற்காக அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவான்.
✔விடை:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“.
(புகாரி 1145, முஸ்லிம் 1386)
❌தவறான கருத்து 2:
இந்த இரவில் தான் நம்முடைய விதி, வாழ்நாள் மற்றும் ஜீவனம் ஆகியவை விதிக்கப்படுக்கின்றன.
✔விடை:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ”இறைவா! இவன் நற்பேறற்றவனா?அல்லது நற்பேறு பெற்றவனா?” என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு ”இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?” என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது. அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன. பிறகு அதில் கூட்டப் படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை.
(ஸஹீஹ் முஸ்லிம் 5146)
❌தவறான கருத்து 3:
ஷஃபான் 15 இல் தான் அல்லாஹ்விடம் அமல்கள் எடுத்துக்காட்டப்படும்.
✔விடை:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னிலையில் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக்காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்”
[திர்மிதி,747; ஸஹீஹ் என அல்-அல்பானி அவர்களால், ஸஹீஹ் அல்-தர்கீப்பில்,1041 வகைப்படுத்தப்பட்டுள்ளது]
❌தவறான கருத்து 4:
ஷஃபான் 15ஆம் இரவில் சிறப்பு வணக்க வழிபாடுகள்,தொழுகைகள், இன்னும் பல செயல்களில் ஈடுப்பட வேண்டும் மேலும் இதற்கென மேலான நற்கூலி உண்டு.
✔விடை:
ஷஃபான் 15ஆம் இரவு குறித்து எந்தவொரு ஸஹீஹ் ஹதீஸும் இல்லை. எனவே இந்த இரவு, மற்ற இரவுகளை போன்றே ஒரு சாதாரண இரவு தான். மேலும் இந்த இரவில் செய்யப்படும் வணக்கவழிபாடுகள், தொழுகைகள் ஆகியவற்றுக்கும் மற்ற இரவுகளில் செய்தால் என்ன நற்கூலி கிடைக்குமோ அது தான் இந்த இரவில் செய்யப்படும் அமல்களுக்கும் கிடைக்கும்.
❌தவறான கருத்து 5:
ஷஃபான் 15ஆம் நாள் நோன்பு நோற்றால், சிறப்பான மற்றும் மேலான நற்கூலி கிடைக்கும்.
✔விடை:
‘நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
[திர்மிதி,761; அல்-நஸயீ, 2424; அல்-அல்பானி அவர்களால் ஸஹீஹ் என ஸஹீஹ் அல்-தர்கீபில், 1038 வகைப்படுத்தப்பட்டுள்ளது]
❌தவறான கருத்து 6:
இந்த இரவில், இறந்துப்போனவர்களின் ஆன்மா அவர்கள் குடும்பத்தாரிடம் திரும்ப வரும்
✔விடை:
இந்த விஷயத்திற்கு குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. இறந்துப்போனவர்களின் ஆன்மா இந்த உலகத்திற்கு திரும்பி வரவே முடியாது. இது உண்மையல்ல, மக்களால் இட்டுக்கட்டப்பட்டது.
❌தவறான கருத்து 7:
இதனை எத்தனை மக்கள் செய்கிறார்கள் என பாருங்கள். அவர்கள் அனைவரும் செய்வது எப்படி பொய்யாக முடியும்?
✔விடை:
அல்லாஹ் கூறுகிறான், “பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.”
[அல் குர்ஆன் 6:116]
எனவே, பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள் அதனால் அது உண்மையாக தான் இருக்கும் என நம்புவது பலவீனமான விவாதமாகும்.