*சபை ஒழுக்கங்கள்!!!*
இஸ்லாமிய மார்க்கம் மற்ற
மதங்களை விடப் பல வகைகளில்
சிறந்து விளங்குகிறது…!
இஸ்லாம் சிறந்து
விளங்குவதற்குக் காரணம்,
அதன் கொள்கைகளும் அதில்
உள்ள நல்ல அறிவுரைகளும்
தான்…!
மனிதன் பிறந்தது முதல் அவன்
இறக்கும் வரை அவன்
சந்திக்கும் அனைத்து
விஷயங்களுக்கும் அழகிய
முறையில் வழிகாட்டுகிறது…!
அந்த வகையில் மனிதன் சிறுநீர்
கழிப்பதன் ஒழுங்குகளைக் கூட
இந்த மார்க்கம் சொல்லித்
தருகிறது…!
ஸல்மான் அல் ஃபார்சீ (ரலி)
அவர்களிடம், மல ஜலம் கழிக்கும்
முறை உட்பட அனைத்தையுமே
உங்கள் இறைத்தூதர்
உங்களுக்குக் கற்றுத்
தந்திருக்கிறார் (போலும்)
என்று (பரிகாசத்துடன்)
கேட்கப்பட்டது.
அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள்,
ஆம் (உண்மை தான்); மல ஜலம்
கழிக்கும் போது கிப்லாவை
முன்னோக்க
வேண்டாமென்றும் (மல ஜலம்
கழித்த பின்) வலக் கரத்தால்
துப்புரவு செய்ய
வேண்டாமென்றும், மூன்றை
விடக் குறைவான கற்களால்
துப்புரவு செய்ய
வேண்டாமென்றும், கெட்டிச்
சாணத்தாலோ எலும்பாலோ
துப்புரவு செய்ய
வேண்டாமென்றும் எங்களை
(எங்கள் நபி) தடுத்தார்கள் என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி),
நூல்: முஸ்லிம் (437)
நான் என் தந்தை(யான அபூ ஸாலிஹ் (ரஹ்) அவர்கள்) உடன் அமர்ந்திருந்த போது, ஒரு சிறுவனும் எங்களுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவன் அவ்விடத்திலிருந்து எழுந்து சென்று, பின் (சிறிது நேரங்கழித்து) மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான். அப்போது எனது தந்தை, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீஸை எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். “ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சுஹைல் பின் அபூ ஸாலிஹ் (ரஹ்)
நூல்: அபூதாவூத் 4214
இவ்வாறு வீட்டிற்குச்
செல்பவர்கள், சபைக்குச்
செல்பவர்கள் எவ்வாறு நடந்து
கொள்ள வேண்டும்
என்பதையும் இஸ்லாம்
வழிகாட்டியுள்ளது…!
அதன் விவரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.. இன்ஷாஅல்லாஹ் ..
சபை மற்றும் வீட்டிற்குச்
செல்லும் முன் அனுமதி
பெற்று ஸலாம் கூறுதல்..!!!
நம்பிக்கை கொண்டோரே!
உங்கள் வீடுகள் அல்லாத வேறு
வீடுகளில் அவர்களின் அனுமதி
பெறாமலும் அவ்வீட்டாருக்கு
ஸலாம் கூறாமலும்
நுழையாதீர்கள்! இதுவே
உங்களுக்குச் சிறந்தது.
இதனால் பண்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 24:27)
நபி (ஸல்) அவர்கள்
(சபையோருக்கு, அல்லது
அயலார் வீட்டுக்குள் நுழைய
அனுமதி கேட்டு) சலாம்
கூறினால் மூன்று முறை
சலாம் கூறுவார்கள். ஏதாவது
ஒரு வார்த்தை பேசினால்
(மக்கள் நன்கு விளங்கிக்
கொள்வதற்காக) அதனை
மூன்று முறை திரும்பச்
சொல்வார்கள்.
அறிவிப்பவர்:
அனஸ் (ரலி),
நூல்: புகாரி (6244)