மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?
இவ்வசனத்தில் (71:27) “இவர்களை விட்டு வைத்தால் மக்களை வழிகெடுப்பார்கள்; பாவியைத்தான் பெற்றெடுப்பார்கள்” என்று நூஹ் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் கூட நல்லவராக மாற மாட்டார்கள் என்றும் அவர்கள் பெற்றெடுக்கும் சந்ததிகளும் பாவிகளாக இருப்பார்கள் என்றும், எந்த மனிதரும் கூற முடியாது. அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் இறைத்தூதர்கள் கூட இப்படிக் கூற முடியாது. எதிர்காலத்தில் அந்த மக்கள் என்ன செய்வார்கள்? எப்படி நடப்பார்கள் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இதை நூஹ் நபி எப்படிச் சொல்லியிருக்க முடியும்? என்ற சந்தேகம் எழலாம்.
இது நியாயமான சந்தேகம் தான். ஆனால் மேற்கண்டவாறு நூஹ் நபி அவர்கள் சுயமாக கூறவில்லை. அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் தான் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
11:36 வசனத்தில் உமது சமுதாயத்தில் ஒருவரும் இனிமேல் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைவனால் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் அடிப்படையிலேயே நூஹ் நபி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.