முதல் மார்க்கம் இஸ்லாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களையும் இவ்வசனங்கள் (2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15, 51:36) முஸ்லிம்கள் என்று குறிப்பிடுகின்றன.
இஸ்லாம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் என்பது முதல் மனிதர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற ஒரு கொள்கையாகும்.
“அகில உலகுக்கும் ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான்; மறுமை வாழ்க்கை இருக்கிறது” என்பன போன்ற அடிப்படையான கொள்கைகள், முதல் மனிதர் காலத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை அனைவருக்கும் ஒரே விதமாகவே வழங்கப்பட்டன. ஒரு சில உட்பிரிவுகளில் மட்டுமே வித்தியாசமான சட்டங்கள் சிலருக்கு அருளப்பட்டன.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் உலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் எந்த மார்க்கத்தைப் போதித்தார்களோ அந்த மார்க்கமும் இஸ்லாம் மார்க்கமே.
திருக்குர்ஆன் 22:78 வசனம் இக்கருத்துக்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.