பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் என்று இவ்வசனத்தில் (70:43) கூறப்பட்டுள்ளது.
பலி பீடங்களில் பலிகொடுத்த பின் அதை எடுப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் விரைந்து செல்வார்கள்.
நமது நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களில் தேங்காய் உடைக்கும்போது அதைப் பொறுக்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது போல் பலி பீடங்களில் ஒருவர் பலி கொடுக்கிறார் என்று தெரிந்தவுடன் அந்த இறைச்சியைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக விரைவார்கள்.
மண்ணறையிலிருந்து எழுப்பப்படும்போது அவர்கள் மிக விரைவாக எழுந்து வருவார்கள் என்பதைக் குறிப்பிடவே இந்த உவமையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.