இறைத்தூதர்கள் அனுப்பப்படும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர்.
தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ் நபியின் சமுதாயம் இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது, தமது தவறைத் திருத்திக் கொண்டு மன்னிப்புக் கேட்டதால் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இது போல் தண்டனைக்கான அறிகுறி வந்தபோது மற்ற சமுதாயமும் மன்னிப்புக் கேட்டு தப்பித்திருக்க வேண்டாமா? என்று இறைவன் இவ்வசனத்தில் (10:98) கேட்கிறான்.