முஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது.
இந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது.
ஆரம்பத்தில் எதிரிகளின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் எதிரியின் பலத்தில் பாதி இருந்தால் தான் போர் கடமை என்று தளர்த்தப்பட்டது. பாதியை விடக் குறைவாக இருந்தால் போர் கடமை இல்லை என்று இவ்வசனங்கள் (8:65,66) வழிகாட்டுகின்றன.
எதிரிகளின் படைபலத்தில் பாதிக்கும் குறைவான நிலையில் முஸ்லிம்களின் படைபலம் இருந்தால் போரிடாமல் இருப்பதோ, எதிரி நாட்டுடன் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்வதோ குற்றமாகாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.