திருக்குர்ஆனின் 9:60 வசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவது ஆகும்.
அரபு மூலத்தில் ஸதகா – தர்மம் – என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நாமாக விரும்பிச் செய்யும் தர்மத்தையும், கட்டாயக் கடமையான ஸகாத்தையும் குறிக்கும். ஆனால் இந்த வசனத்தில் ஸதகா என்பது கட்டாயக் கடமையான ஸகாத் என்பதைத்தான் குறிக்கிறது.
ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் “இது அல்லாஹ் விதித்த கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமாக விரும்பிச் செய்யும் தர்மத்தை எல்லா நற்பணிகளுக்கும் செலவிடலாம். ஆனால் ஸகாத் எனும் கட்டாயக் கடமையான தர்மத்தை குறிப்பிட்ட எட்டு வழிகளில் மட்டுமே செலவிட வேண்டும் என்று கூறப்படுவதால் இந்த இடத்தில் கட்டாயக் கடமையான ஸகாத்தைத்தான் குறிக்கும்.