இவ்வசனத்தில் (2:215) எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படுகிறது.
கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக “செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்” என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (2:215) தெளிவுபடுத்துகிறது.
மற்ற பணிகளுக்குச் செலவிடுவதை விட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் செலவிடுவது சிறந்ததாகும் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது.
எத்தனையோ அறப்பணிகளுக்குச் செலவு செய்வோர் பெற்றோரைச் சந்தியில் விட்டு விடுகின்றனர். உறவினர்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்களே முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் இங்கே போதிக்கப்படுகின்றது.