அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றியபோதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்தபோதும்,

.

*நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்*

என்று அவர் தமது தோழரிடம் கூறியபோதும்

*அல்லாஹ் உதவியிருக்கிறான்.*

*தனது அமைதியை அவர் மீது இறக்கினான்*.

நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். *அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது.*அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

If you do not help him, God has already helped him, when those who disbelieved expelled him, and he was the second of two in the cave. He said to his friend, *Do not worry, God is with us.* And God made *His tranquility descend upon him,* and supported him with forces you did not see, and made the word of those who disbelieved the lowest, while *the Word of God is the Highest.* God is Mighty and Wise.

*(Al Quran 9:40)*

————————————————————-

*இவ்வசனம் இறங்கப்பட்டதன் பின்னனி…*

————————————————————-

//* *நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்* (தூதரின் வலுவான இறை நம்பிக்கை),*//

அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த *அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிட மிருந்து மன அமைதியை அருளினான்* எனும் (9:40ஆவது) வசனம் இறங்கியது

4663 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) *நபி (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர் எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன்*.

நான், அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் *ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவானே!* என்று (அச்சத்துடன்) சொன்னேன்.

*நபி (ஸல்) அவர்கள், எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?* என்று கேட்டார்கள்.

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/BIda46XeKJ8

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed