அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
————————————————
ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்? என்று கேட்பார்கள்.

அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது.

நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.

அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும். ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.
———————————-
[36 யாஸீன் 51-58]

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed