திருக்குர்ஆன் கேள்வி – பதில்

கேள்வி : திருக்குர்ஆன் அறிவுரைகள் யாருக்கு சென்றடைய வேண்டியது?

பதில் : உலக மக்கள் அனைவருக்கும் (அல்குர்ஆன் 14:52)

கேள்வி : மறுமைநாள் வரும் போது யூதர்கள் கல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் எது அவர்களைக் காட்டிக் கொடுக்கும்?

பதில் : அந்த கல்லே எனக்கு பின்னால் ஒரு யூதன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று சொல்லும். (ஆதாரம் : புகாரி 2925)

கேள்வி : சில நேரங்களில் காஃபிர்கள் எப்படி நினைப்பார்கள்?

பதில் : “தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே’ (அல்குர்ஆன் 15:2)

கேள்வி : முடியாலான செருப்புகளை அணிகின்ற ஒரு சமுதாயத்தினருடன் போரிடுவது எதனின் அடையாளம்?

பதில் : மறுமையின் அடையாளமாகும். (ஆதாரம் : புகாரி 2927)

கேள்வி : நபிகளாரை அன்றைய கால இணைவைப்பாளர்கள் எவ்வாறு இகழ்ந்தார்கள்?

பதில் : பைத்தியக்காரர் (அல்குர்ஆன் 15:6)

கேள்வி : மறுமை நாளின் நெருக்கத்தில் போர் செய்யப்படும் துருக்கியர்களின் முகங்கள் எப்படி இருக்கும்?

பதில் : முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். (ஆதாரம் : புகாரி 2928)

கேள்வி : நபிகளார் உண்மையாளராக இருந்திருந்தால் எதை கொண்டு வந்திருப்பார் என்று கேட்டனர்?

பதில் : வானவரை கொண்டுவந்திருப்பார் என்று கூறினர். (அல்குர்ஆன் 15:7)

கேள்வி : ஹுனைன் போர்களத்தில் எதிரணியில் மிகச்சரியாக அம்புகளை எய்த கூட்டத்தினர் யார்?

பதில் : ஹாஸின் மற்றும் பனூநஸ்ர் கூட்டத்தினர் (ஆதாரம் : புகாரி 2930)

கேள்வி : நபிகளாருடன் வானவர்களை ஏன் அல்லாஹ் அனுப்பவில்லை?

பதில் : தக்க காரணமில்லாமல் வானவர்களை இறைவன் அனுப்பமாட்டான் (அல்குர்ஆன் 15:8)

கேள்வி : “அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக!” என்று நபி (ஸல்) அவர்கள் எந்த போரில் கூறினார்கள்?

பதில் : அஹ்ஸாப் (அகழ்) போர் (ஆதாரம் : புகாரி 2931)

கேள்வி : வானத்தின் வாசலை திறந்துவிட்டு அதில் இறைமறுப்பாளர்களை நுழையச் செய்தாலும் அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்?

பதில் : “எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 15:14,15)

கேள்வி : “அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக!” என்று நபிகளார் எதற்காக இவ்வாறு கூறினார்கள்?

பதில் : அகழ் போரின்போது அஸர் தொழுகை சரியான நேரத்தில் தொழ முடியாமல் போனதால் (ஆதாரம் : புகாரி 2931)

கேள்வி : ஒட்டுக் கேட்கும் ஷைத்தானை எது விரட்டும்?

பதில் : அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும் (அல்குர்ஆன் 15:18)

கேள்வி : எந்த கூட்டத்தினருக்கு எதிராக இறைவனின் பிடியை கடுமையாக்க வேண்டும் என்று நபிகளார் கூறினார்கள்?

பதில் : முளர் கூட்டத்தினர் (ஆதாரம் :புகாரி 2932)

கேள்வி : வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருள்கள் எதில் உள்ளன?

பதில் : பூமியில் (அல்குர்ஆன் 15:19,20)

கேள்வி : முளர் கூட்டத்தினருக்கு எப்படிப்பட்ட பஞ்சம் வர வேண்டும் என்று நபிகளார் கேட்டார்கள்?

பதில் : யூசுஃப் (அலை) அவர்களின் காலத்தில் வந்ததுபோல் (ஆதாரம் : புகாரி 2932)

கேள்வி : ஆதம் (அலை) அவர்களுக்கு இப்லீஸ் பணி மறுத்தது ஏன்?

பதில் : “சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட மனிதனுக்கு பணியமாட்டேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 15:33)

கேள்வி : நபிகளார் அவர்கள், அகழ் போரின்போது இறைவனை எப்படி அழைத்து பிரார்த்தித்தார்கள்?

பதில் : “இறைவா! திருக்குர்ஆனை அருள் பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! என்று பிரார்த்தித்தார்கள். (ஆதாரம் : புகாரி 2933)

கேள்வி : இப்லீஸுக்கு எதுவரை சாபம் உள்ளது?

பதில் : தீர்ப்பு நாள்வரை (அல்குர்ஆன் 15:35)

கேள்வி : “அஸ்ஸாமு அலைக்க” (“உங்கள் மீது மரணம் உண்டாகட்டும்”) என்று நபிகளாரைப் பார்த்து கூறியவர்கள் யார்?

பதில் : யூதர்கள் (ஆதாரம் : புகாரி 2935)

கேள்வி : இறைவன் சொர்க்கத்திலிருந்து இப்லீஸை வெளியேற்றியதால் அவன் என்ன சபதமிட்டான்?

பதில் : மனிதர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் என்று கூறினான். (அல்குர்ஆன் 15:39,40)

கேள்வி : “நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல் போவதின்) பாவம் உம்மைச் சேரும்” என்று யாருக்கு நபிகளார் கடிதம் எழுதினார்கள்?

பதில் : (ரோமாபுரியின் சக்கரவர்த்தி) சீசருக்கு (ஆதாரம் : புகாரி 2936)

கேள்வி : இப்லீஸை பின்பற்றி நடப்பவர்களுக்கு என்ன கிடைக்கும்?

பதில் : இப்லீஸை பின்பற்றிய அனைவரும் நரகத்தில் செல்வர் (அல்குர்ஆன் 15:43)

கேள்வி : தவ்ஸ் குலத்தினர் இஸ்லாத்தை ஏற்க மறுத்தபோது அவர்களை சபித்து பிராத்தியுங்கள் என்று நபிகளாரிடம் கேட்டபோது நபிகளார் எவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்?

பதில் : “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர் வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (ஆதாரம் : புகாரி 2937)

கேள்வி : நரகத்திற்கு எத்தனை வாசல்கள்?

பதில் : ஏழு (அல்குர்ஆன் 15:44)

கேள்வி : நபிகளார் ஏன் மோதிரம் செய்து கொண்டார்கள்?

பதில் : மன்னர்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் படிக்கமாட்டார்கள்’ என்று கூறப்பட்டதால் (ஆதாரம் : புகாரி 2938)

கேள்வி : சொர்க்கம் செல்பவர்களின் உள்ளங்களிலிருந்து எது நீக்கப்படும்?

பதில் : குரோதங்கள் நீக்கப்படும் (அல்குர்ஆன் 15:47)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed