*திருக்குர்ஆன் ஓதுவதின் நன்மைகள்*
——————————————————-
*//ஒன்றுக்குப் பத்து நன்மை//*
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து *ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.*
*அலிஃப், லாம், மீம்* என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : *திர்மிதீ் 2910
\\*மறுமையில் பரிந்துரை*\\
*நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி),
நூல் : *முஸ்லிம்-1470 (804)*
//* இரு மடங்கு நன்மை*//
குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். *சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : *முஸ்லிம்-1462 (798)*
\\*மனிதரில் சிறந்தவர்*\\
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர் தான்.*
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி), நூல் : புகாரி-5027
\\*அல்லாஹ்வின் அருள்*\\
*குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப் படுவீர்கள்!* (அல்குர்ஆன் *7:204*)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, *அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது.*அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்: 5231.
*//ஷைத்தானை விரட்டும் மருந்து*//
*உங்கள் வீடுகளை மண்ணறை களாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான்* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : *முஸ்லிம்-1430 (780)*
\\*பாதுகாப்பு கேடயம்*\
நீங்கள் *படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்* (சுருக்கம்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : *புகாரி 3275*
//* அழகிய உதாரணத்துக்குரியவர்*//
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று!*
*(நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார்.அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது.*
*தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு!*
*தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.*
அறிவிப்பவர் : அபூ மூஸல் அஷ்அரீ (ரலி),
நூல் : *புகாரி-5020*
இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும் அதன் சிறப்புக்களை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!