*ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?*

*பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 699

*இமாமைப் பின்பற்ற வேண்டும்; இமாமை முந்தக் கூடாது* என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இமாமைப் பின்பற்ற வேண்டும் என்றால், *இமாம் செய்வதைத் தொடர்ந்து செய்வது தான் பின்பற்றுதல் ஆகும்*. இமாமுடன் சேர்ந்து செய்வது பின்பற்றுதல் ஆகாது.

எனவே இமாம் ருகூவுக்குச் சென்ற பிறகு, அதாவது அவரைப் பின்தொடர்ந்து நாம் ருகூவுக்குச் செல்ல வேண்டும். *இமாமுடன் சேர்ந்து செய்யக் கூடாது*.

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed