*சூனியம் கண் திருஷ்டி போன்றவை அல்லாஹ்வுக்கு இணையான காரியங்கள்* என்று கூறி மறுக்கும் நீங்கள் *எப்படி தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்❓*

ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில் குறிப்பிட்ட காரியத்தை செய்வார் என்று மனித தன்மைக்கு அப்பாற்ப்பட்டதாக குர்ஆனோ ஹதீஸோ ஒருவரை பற்றி கூறினால் அதை நம்பலாம், நம்ப வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அது அல்லாஹ்வுக்கு இணையானதில்லை.

*குறிப்பிட்ட நேரத்திலும், குறிப்பிட்ட விதத்திலும் மட்டும் தான் அவரால் இதை செய்ய முடியும் என்கிற விதியே, அவர் அல்லாஹ்வின் தன்மையை கொண்டிருக்கவில்லை, மாறாக அல்லாஹ் தான் சோதனைக்காக இந்த ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளான்* என்கிற கருத்தை அழுத்தமாக புரிய வைக்கிறது,

*சாமிரி என்பவன் மாட்டை போல ஒன்றை செய்கிறான், அது சத்தம் போடுகிறது என்று குர்ஆன் சொல்கிறது என்றால் அந்த நேரத்தில் அது மாடாக ஆனது, இன்னொரு சந்தர்ப்பத்தில் அது ஆகி இருக்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அது சத்தம் போடாது*.

ஈசா நபி இறந்தவர்களில் சிலரை உயிர் கொடுத்து எழுப்பியதும் இதே நிலையில் தான்.

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவை பிளந்தார்கள்* என்றால் அதுவும் இதே விதிக்கு உட்பட்டு தான்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இயன்ற காரியங்களை நபிமார்கள் செய்ததாக நம்புவது எப்படி இணை கற்பித்தலில் சேராதோ அது போல் இதுவும் சேராது.

ஏனெனில் நபிமார்கள் செய்த அற்புதங்கள் அல்லாஹ் அனுமதி கொடுத்த அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. *ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அல்லாஹ் அனுமதி அளித்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன*.

*இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்களை தஜ்ஜால் செய்வான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான்* என்று தெரிகிறது.

மக்களைச் சோதித்துப் பார்க்க இப்லீசுக்கு *அல்லாஹ் சில அதிகாரத்தைக் கொடுத்து போல் தஜ்ஜாலுக்கும் கொடுத்துள்ளான்*

இறைவன் அனுமதித்த காரணத்தால் தான் ஒருவரை ஒரு தடவை தஜ்ஜால் உயிர்ப்பித்துக் காட்டுகிறான். *அதே மனிதனை மீண்டும் கொலை செய்ய முயலும் போது அவனால் செய்ய இயலாமல் போனதற்குக் காரணம்*

கியாமத் நாளுக்கு சமீபமாக தஜ்ஜால் சில அற்புதங்களை செய்து காட்டுவான் என்றால் அதையும் இதே அளவுகோலின் படி தான் நாம் புரிய வேண்டும்.

அதே சமயம், இவர்களுக்கு எல்லாம் இத்தகைய அற்புத சக்தியை அல்லாஹ் வழங்கி இருக்கிறான் என்பதை நம்புவதும், *எந்த மனிதனாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், உலகின் எந்த பாகமானாலும், எந்த காலகட்டமானாலும், எந்த மனிதரையும் எந்த வித புற சாதனமும் இன்றி வீழ்த்தி விடலாம் என்று நம்புவதும் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு* என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

—————————-

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed