\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\
*சீனா சென்றேனும் சீர் கல்வியைத் தேடு*
شعب الإيمان (3/ 193)
1543 – أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أخبرنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ الشَّيْبَانِيُّ، حدثنا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، ح وَأَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ الْأَصْبَهَانِيُّ، أخبرنا أَبُو سَعِيدِ بْنُ زِيَادٍ، حدثنا جَعْفَرُ بْنُ عَامِرٍ الْعَسْكَرِيُّ، قَالَا: حدثنا الْحَسَنُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي عَاتِكَةَ، – وَفِي رِوَايَةِ أَبِي عَبْدِ اللهِ – حدثنا أَبُو عَاتِكَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اطْلُبُوا الْعِلْمَ وَلَوْ بِالصِّينِ، فَإِنَّ طَلَبَ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ ” ” هَذَا حَدِيثٌ مَتْنُهُ مَشْهُورٌ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ ” وَقَدْ رُوِيَ مِنْ أَوْجُهٍ، كُلُّهَا ضَعِيفٌ
*சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : பைஹகீ ஷுஅபுல் ஈமான், பாகம் :4, பக்கம் :174,
அல்லுஅஃபாவுல் கபீர்லி உகைலீ, பாகம் :4, பக்கம் : 162,
ஜாமிவு பயானில் இல்மி வஃபழ்ஹிலிஇப்னு அப்துல்பர், பாகம் :1, பக்கம் :14,15,21,
அல்காமில் ஃபீ லுஅஃபாவுல் ரிஜால்லிஇப்னு அதீ, பாகம் :1, பக்கம் 177,
முஸ்னதுல் பஸ்ஸார், பாகம் : 1, பக்கம் : 98
இச்செய்தியைப் பதிவு செய்த இமாம்கள் இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அதன் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும் என்றும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளர்கள்.
இந்தச் செய்தியில் சீனா என்ற வாசகத்தை *அபூ ஆத்திகா என்பவர் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். இவர் ஹதீஸ் கலையில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்*) ஆவார்.
*கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை* என்ற வாசகம் இடம்பெற்றுள்ள *அறிவிப்பும் பலவீனமானதே என்று இமாம் உகைலீ* அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவராவர். மேலும் இந்தச் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. இது பொய்யானதாகும். இச்செய்தியில் இடம்பெறும் *வஹப் பின் வஹப் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர்* என்று இப்னு அதீ அவர்கள் அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூ ஆத்திகா என்பவர் யாரென தெரியவில்லை. இவர் இந்த செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதும் புரியவில்லை. இந்த செய்தி அடிப்படையற்ற செய்தியாகும் என்று இமாம் பஸ்ஸார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.