அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்
அந்நாளில் வானம் உருக்கிய செம்பு போல் ஆகும்.
மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள்.
அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.
அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும்.
[அல்குர்ஆன் 70:8-16]