ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ?

ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள்

1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர் அதை கடித்து விழுங்க முயற்சித்து தோற்றுப் போனார் என்ற ஒரு செய்தி இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிகாயா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறிப்பிடாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது.

2. ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை ஹிந்த் அவர்களே வெட்டி எடுத்தார்கள் என்றும் உஹுத் போரில் கலந்துகொண்ட முஸ்லிம் ஆண்களின் காதுகளையும் மூக்குகளையும் வெட்டி கால் சலங்கைகளாக மாற்றிக் கொண்டார்கள் என்ற செய்தி இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியும் முழு அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இடம் பெற்றுள்ளதால் இதுவும் பலவீனம் அடைகிறது.

3. ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷீ அவர்கள் தம்முடைய எஜமான்,ஜுபைர் பின் முத்இம் அவர்களிடம் காட்டுவதற்காக ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை மக்காவிற்கு எடுத்துச் சென்றார் என்று வாகிதி அவர்களின் மகாஸீ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாஸீ என்ற நூலை எழுதி வாகிதி என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றது உண்மை, ஆனால் அவர்களின் உடலை வெட்டி ஈரலை எடுத்த ஹிந்த் அவர்கள் கடித்து துப்பியதாக வரும் மூன்று செய்திகளும் ஆதாரமற்றது.

 

(குறிப்பு – வஹ்ஷீ அவர்களும், ஹிந்த் அவர்களும் பின்னர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர் என்பது முக்கிய செய்தியாகும்.)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed