ஷாஃபான் 15 ல் நரகவாசிகள் விடுதலையா?

ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : பைஹகீ இமாம் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஃபுல் ஈமான், ஹதீஸ் எண் : 3837

விளக்கம்

ஷஅபான் 15ம் நாள் அல்லாஹ் நரகவாசிகளை விடுதலை செய்கிறான் என்று அவர்கள் எடுத்துக்காட்டிய செய்தியின் அரபி மூலம் இதோ :

இமாம் பைஹகீ அவர்களின் ஷ‚அபுல் ஈமான் என்ற நூலிருந்து எடுத்துக்காட்டியவர்கள் அந்த செய்தியின் இறுதியில் இமாம் பைஹகீ அவர்களின் அந்த செய்தியின் தரத்தைப் பற்றி கூறியதை வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.

அதன் இறுதியில் هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாகும் என்று குறிப்பிட்டு இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள்.

இந்த விஷயத்தை கூறினால் அவர்களின் ஆதாரத்தின் தகுதி மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அதை தெரிந்து கொண்டே மறைத்திருக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை வல்லுநர்கள் மிகக் கடுமையாக குறைகூறியுள்ளனர்.

இவர் ஹதீஸ்களில் கைவிடப்பட்டவராவார் என இமாம் ஹாகிம் குறைகூறியுள்ளார்கள்.

(நூல் : ஸ‚ஆலாத்துல் ஹாகிம் பாகம் : 1 பக்கம் : 135)

இவர் எந்த ஒன்றுக்கும் தகுதியில்லாதவர் என இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள்.

(நூல் : சுஆலாத்துஸ் சுலமீ)

மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஸல்லாம் பின் சுலைமான்” என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.

ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1,பக்கம் : 261

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed