வெளியூரில் மரணிப்பதற்க்கு  சிறப்புண்டா ?

மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு அந்தளவு இடம் அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

நூற்கள் : அஹ்மத் 6369, நஸாயீ, இப்னுமாஜா

 

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. மேற்கண்ட ஹதீஸில் மூன்றாவது அறிவிப்பாளராக ஹுயை பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஹுயை பின் அப்துல்லாஹ் என்பார் நம்பகமானவர் அல்ல. இவரைப் பற்றி தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் உள்ள விமர்சனத்தைக் கீழே தருகிறோம்.

இவரைப் பற்றி அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள்.

இவர் விஷயத்தில் விமர்சனம் உள்ளது என்று புகாரி கூறுகிறார்கள்.

இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் என்று நஸாயீ அவர்கள் கூறுகிறார்கள்.

தஹ்தீபுத் தஹ்தீப்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]