யார் இந்த நபித்தோழர்❓

———————————
யார் இந்த நபித்தோழர்


1) நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார்

2) நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள்.

3) இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள் அனுப்பியிருந்தார்கள்.

4) மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்க இவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது.

5) நபி (ஸல்) அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்

6) நபியவர்கள் இவர் சிறுவராக இருக்கும் போது இவரை ஒரு தொடையிலும் ஹசன் (ரலி) அவர்களை மறு தொடையிலும் வைத்து இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள்.

7) மக்கா வெற்றியின் போது நபியவர்களுடன் கஃபாவினுல் நுழைந்தவர்

8 ) மக்கா வெற்றியின் போது இவரை நபிகளாரின் ஒட்டகத்தின் மேல் ஏற்றிச் சென்றார்கள்

9) ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறிய நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் நாங்கள் நல்லதைத் தவிர வேறதையும் அறியமாட்டோம் என்று சொன்னவர்.

10) இவருடைய வீட்டில் நபிகளாரின் மனைவி ஸபிய்யா (ரலி) அவர்கள் அறை இருந்தது

➖➖➖➖➖➖➖➖➖➖➖
உஸாமா பின் ஜைத் (ரலி)
➖➖➖➖➖➖➖➖➖➖➖

  1. ஆதாரம் புகாரி (3730)
  2. ஆதாரம் புகாரி (3730)
  3. ஆதாரம் புகாரி (3730)
  4. ஆதாரம் புகாரி (4304)
  5. ஆதாரம் புகாரி (2988)
  6. ஆதாரம் புகாரி (6003)
  7. ஆதாரம் புகாரி (2988)
  8. ஆதாரம் புகாரி (2988)
  9. ஆதாரம் புகாரி (2637)
  10. ஆதாரம் புகாரி (2038)

ஏகத்துவம்