தொழுகை
முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்.
தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும் வணக்கமாகும்.
ஒவ்வொரு நாளும் ஐந்து தடவை, ஐந்து நேரங்களில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இது தவிர அவரவர் விருப்பப்பட்டு தமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது தொழுது இறைவனின் அன்பைப் பெறலாம்.