முதல் பார்வைக்கு அனுமதி

பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),

நூல்கள் : திர்மிதீ (2701), அபூதாவூத் (1827), அஹ்மத் (1302, 21896, 21913, 21943), தாரமீ (2593), முஸ்னதுல் பஸ்ஸார் (701, 907, 4395), பைஹகீ (13898), ஹாகிம் (2788) திர்மிதீ, பஸ்ஸார் (4395), பைஹகீ, ஹாகிம், அஹ்மத் (21896, 21913, 21943) ஆகிய நூல்களில் இப்னு புரைதா என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும் இதில் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராவார்.

முஸ்னதுல் பஸ்ஸார் (701) நூலில் நுஃமான் பின் ஸஅத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும், அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

பஸ்ஸார் (907), தப்ரானீ – அவ்ஸத் (674) ஆகிய நூல்களில் ஸலமா பின் அபீ துபைல் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]