மகிழ்ச்சியான வார்த்தைகளை கேட்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்லலாமா

மகிழ்ச்சியான வார்த்தைகளை கேட்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்லலாமா❓

https://eagathuvam.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/

திக்ர் ஆக சொல்லும்போது சப்தமில்லாமலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சொல்லும்போது தேவைக்கேற்ப விரும்பியவாரும் சொல்லலாம்.

என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறினோம். உடனே அவர்கள்,

சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்கள்.

நாங்கள், அல்லாஹு அக்பர் என்று கூறினோம்.

அவர்கள், சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

நாங்கள், அல்லாஹு அக்பர் என்று கூறினோம்.

அப்போது அவர்கள், நீங்கள் மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு நிற முடியைப் போலத் தான் இருப்பீர்கள் அல்லது கருப்பு நிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை நிற முடியைப் போலத் தான் (குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).
நூல்: புகாரி 3348, 4741

இந்த ஹதீஸின்படி பெருநாள் தொழுகையில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா? என்றால், பொதுவாக திக்ருகளைச் செய்யும் போது சப்தமிட்டு செய்வதற்குத் தடை உள்ளது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன் 7:205)

இந்த வசனத்திற்கு முரணில்லாத வகையில் தான் ஹதீஸை விளங்க வேண்டும். பெருநாள் தொழுகையில் தக்பீர் சொல்வதென்பது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக செய்யப்படுவதாகும்.

இதில் சப்தம் குறைவாக தக்பீர் சொல்வது தான் சிறந்தது.

மேற்கண்ட ஹதீஸில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது நபித்தோழர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறுகின்றார்கள்.

எனவே இதை மற்ற திக்ருகளைப் போல் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஹதீஸின் அடிப்படையில் மகிழ்ச்சியான ஒரு செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாமே தவிர எல்லா சந்தர்ப்பத்திலும் இதை அனுமதியாக எடுத்துக் கொள்ள முடியாது.

الله اعلم


ஏகத்துவம்

You missed