பிள்ளைகளை ஏழு வயதில் தொழுவதற்கு ஏவ வேண்டுமா?

சில ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவையாக இருக்கும். அவற்றை ஆதாரப்பூர்வமான செய்திகள் என்று நம்பியே மக்கள் பிறருக்கும் அதை உபதேசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவை பலவீனமானவையாக இருக்கும்.

அவ்வாறான செய்திகளில் ஒன்றுதான், “குழந்தைகளுக்கு ஏழு வயதில் தொழக் கட்டளையிட வேண்டும். பத்து வயதில் தொழுமாறு அடித்து அறுவுறுத்த வேண்டும்” என்ற செய்தி. இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் தொடர்களும் பலவீனமானதாகும்.

முதல் அறிவிப்பு

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (1/ 185)
495 – حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ – يَعْنِى الْيَشْكُرِىَّ – حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ سَوَّارٍ أَبِى حَمْزَةَ – قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِىُّ الصَّيْرَفِىُّ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ
السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (2/ 229)
3361- وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِىُّ أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِىٍّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ الْقَزَّازُ بِمِصْرَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى كَاتِبُ الْعُمَرِىِّ حَدَّثَنَا مُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنِ الْخَلِيلِ بْنِ مُرَّةَ عَنِ اللَّيْثِ بْنِ أَبِى سُلَيْمٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« عَلِّمُوا صِبْيَانَكُمُ الصَّلاَةَ فِى سَبْعِ سِنِينَ ، وَأَدِّبُوهُمْ عَلَيْهَا فِى عَشْرِ سِنِينَ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ أَمَتَهُ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ فَلاَ تَنْظُرْ إِلَى عَوْرَتِهِ وَالْعَوْرَةُ فِيمَا بَيْنَ السُّرَّةِ وَالرُّكْبَةِ

உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது அவர்களை அதற்காக அடியுங்கள்.

இச்செய்தியின் இந்த அறிவிப்பு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை அவரிடமிருந்து அவரது மகன் ஷுயைப் அறிவிக்க, அவரிடமிருந்து அம்ரு என்ற அவரது பேரன் அறிவிக்கிறார். அம்ரு என்பவரிடமிருந்து ஸவ்வார் பின் தாவூத் என்பவரும் லைஸ் பின் அபீ சுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள்.

இவ்விருவருமே ஹதீஸ்துறையில் ஏற்றுக் கொள்ளத்தகாத பலவீனமானவர்கள் ஆவர்.
ஸவ்வார் பின் தாவூத் என்பவரது அறிவிப்புகள் அபூதாவூத், அஹ்மத், தாரகுத்னீ, பைஹகீ, ஹாகிம், இப்னு அபீ ஷைபா உள்ளிட்ட பல நூற்களில் இடம்பெற்றுள்ளது.

ஸவ்வார் பின் தாவூத் பற்றிய விமர்சனங்கள்

تهذيب التهذيب ـ محقق (4/ 235)
وقال اسحاق بن منصور عن ابن معين ثقة وقال الدارقطني لا يتابع على احاديثه فيعتبر به وذكره ابن حبان في الثقات قلت: وقال يخطئ.

ஸவ்வார் பின் தாவூத் என்பவர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்.
இவரது ஹதீஸ்கள் துணைச் சான்றாகக் கூட எடுக்கப்படாது என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.

تهذيب الكمال 742 (12/ 236)
قال أبو طالب (2) ، عن أحمد بن حنبل : شيخ بصري لا بأس به ،

இவர் பஸராவைச் சார்ந்தவராவார். இவரைக் கொண்டு பிரச்சனையில்லை என்று இமாம் அஹ்மது அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 4, பக்கம் 235, தஹ்தீபுல் கமால், பாகம் 12, பக்கம் 236

இவைதான் ஸவ்வார் பின் தாவூத் என்பவர் தொடர்பான கருத்துக்களாகும். இதுவல்லாமல் இவர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு ஹிப்பானும் கூறியுள்ளார். இமாம் ஹிப்பான் ஒருவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ள இயலாது. இவர் தொடர்பான மேற்குறிப்பிட்ட இக்கருத்துக்கள் இவரை பலமானவர் என்று முடிவெடுப்பதற்குப் போதுமானவைகளாக இல்லை.

இந்தக் கருத்துக்களை வைத்து இவர் பலமானவரில்லை என்றாலும் ஹஸன் என்ற நடுத்தரத்தைச் சார்ந்தவர் என்று சில இமாம்கள் கூறுகின்றனர்.

தஹபீ, பஸ்ஸார் போன்ற இமாம்கள் இவர் பலவீனமானவர் என்றே முடிவெடுத்துள்ளனர்.
எனவே, இந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளத்தக்க செய்தி என்ற தரத்தை எட்டுவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாததால் இதை ஏற்றுக் கொள்ள இயலாது.

ஸவ்வார் பின் தாவூத் என்ற இந்த அறிவிப்பாளரின் பெயர் சில இடங்களில் தாவூத் பின் ஸவ்வார் என்று தவறாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் அனைத்து அறிவிப்புகளிலும் அம்ரு பின் ஷுயைப் என்பவர் வழியாகவே நேரடியாக அறிவிக்கிறார். பைஹகீ என்ற ஹதீஸ் கிரந்தத்தில் மாத்திரம் இவருக்கும் அம்ரு பின் ஷுயைபிற்கும் மத்தியில் முஹம்மது பின் ஜுஹாதா என்பவர் இடம்பெறுவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சில குளறுபடிகளும் இந்தச் செய்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்டதைப் போல் இந்தச் செய்தியை அம்ரு பின் ஷுயைப் வழியாக லைஸ் பின் சுலைம் என்பவரும் அறிவிக்கிறார்.

அவர் இடம்பெறும் அறிவிப்பு பைஹகீ என்ற ஹதீஸ் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
லைஸ் பின் அபீ சுலைம் பற்றிய விமர்சனங்கள்

تهذيب الكمال 742 (24/ 282)
قال عَبد الله (1) بن أحمد بن حنبل : سمعت أبي يقول : ليث ابن أَبي سليم مضطرب الحديث ، ولكن حدث عنه الناس.
وَقَال معاوية (2) بن صالح عن يحيى بن مَعِين : ليث بن أَبي سليم ضعيف إلا أنه يكتب حديثه (3).
وَقَال أبو معمر القَطِيعِيّ (3) : كان ابن عُيَيْنَة يضعف ليث بن أَبي سليم (4).
وَقَال أيضا (2) : سمعت أبا زرعة يقول : ليث بن أَبي سليم لين الحديث ، لا تقوم به الحجة عند أهل العلم بالحديث.

லைஸ் பின் சுலைம் என்பவர் ஹதீஸில் குளறுபடி செய்யக்கூடியவர் என்று இமாம் அஹமத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவரை இமாம் இப்னு உயைனா பலவீனப்படுத்தியுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்றும் ஹதீஸ்துறை வல்லுநர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ள மாட்டார்கள் என்றும் இமாம் அபூ ஸுர்ஆ கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால், பாகம் 24, பக்கம் 282

மேற்குறிப்பிட்ட விமர்சனங்களும் இது அல்லாத இன்னும் ஏராளமான விமர்சனங்களும் இவர் விஷயத்தில் கூறப்படுவதால் இவருடைய அறிவிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இரண்டாம் அறிவிப்பு

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (1/ 185)
494 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى – يَعْنِى ابْنَ الطَّبَّاعِ – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « مُرُوا الصَّبِىَّ بِالصَّلاَةِ إِذَا بَلَغَ سَبْعَ سِنِينَ وَإِذَا بَلَغَ عَشْرَ سِنِينَ فَاضْرِبُوهُ عَلَيْهَا

இந்த அறிவிப்பு ஸபிரா பின் மஃபத் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. இது அபூதாவூத், அஹ்மத், பைஹகீ, தப்ரானீ, இப்னு ஹுஸைமா, இப்னு அபீஷைபா உள்ளிட்ட பல நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அனைத்து இடங்களிலும் அவரது பேரன் அப்துல் மலிக் பின் ரபீஃ என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.

அப்துல் மலிக் பின் ரபீஃ பற்றிய விமர்சனங்கள்

الجرح والتعديل (5/ 350)
سئل يحيى بن معين عن احاديث عبد الملك بن الربيع ابن سبرة عن ابيه عن جده فقال: ضعاف.
المجروحين (2/ 132)
عبد الملك بن الربيع بن سبرة (3)، يروى عن أبيه، روى، روى عنه أولاده والقرباء وحرملة بن عبد العزيز وإبراهيم بن سعيد، منكر الحديث جدا، يروى عن أبيه ما لم يتابع عليه.

அப்துல் மலிக் அறிவிக்கும் செய்திகள் பற்றி இமாம் இப்னு மயீனிடம் கேட்கப்பட்ட போது, அவை பலவீனமானவை என்று குறிப்பிட்டார். இவர் ஹதீஸ் துறையில் அதிகம் மறுக்கப்படக் கூடியவர் என்று இமாம் அபூஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 350, மஜ்ரூஹீன், பாகம் 2, பக்கம் 132

யாரும் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிடாமல் இவர் தொடர்பாகக் குறைகளே மிகைத்து இருக்கும் காரணத்தினால் இவர் பலவீனமானவர் ஆவார். எனவே, இந்தச் செய்தியின் இரண்டாவது அறிவிப்பும் பலவீனமடைகிறது.

மூன்றாம் அறிவிப்பு

سنن الدارقطني ـ تدقيق مكتب التحقيق (1/ 432)
891- حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مُرُوهُمْ بِالصَّلاَةِ لِسَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِثَلاَثَ عَشْرَةَ

இந்த அறிவிப்பு அனஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. இது தாரகுத்னீ, தப்ரானீ உள்ளிட்ட சில நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இடம்பெறும் அனைத்து இடங்களிலும் தாவூத் பின் முஹப்பிர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ்களை அதிகம் இட்டுக்கட்டக் கூடியவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.

தாவூத் பின் முஹப்பிர் பற்றிய விமர்சனங்கள்

تهذيب الكمال 742 (8/ 445)
قال عَبد الله بن أحمد بن حنبل (1) : سَأَلتُ أبي عن داود بن المحبر ، فضحك ، وَقَال : شبه لا شيء ، كان لا يدري ما الحديث.
وقَال البُخارِيُّ مثله (2).
وَقَال علي ابن المديني (2) : ذهب حديثه.
وَقَال إبراهيم بن يعقوب الجوزجاني (3) : كان يروي عن كل ، وكان مضطرب الامر.
وَقَال أبو زُرْعَة (4) : ضعيف الحديث.
وَقَال أبو حاتم (5) : ذاهب الحديث عبر ثقة.
وَقَال أبو داود (6) : ثقة شبه الضعيف. بلغني عن يحيى فيه كلام أنه يوثقه.
وَقَال النَّسَائي (7) : ضعيف.
وَقَال صالح بن محمد البغدادي (8) : ضعيف ضاحب مناكير.
وَقَال في موضع آخر (1) : يكذب ، ويضعف في الحديث.
وَقَال الدَّارَقُطنِيّ (2) : متروك الحديث.
وَقَال في موضع آخر ، فيما حكاه عنه عبد الغني بن سَعِيد (3) : كتاب”العقل”وضعفه أربعة : أولهم ميسرة بن عبدربه ، ثم سرقه منه داود بن المحبر ، فركبه بأسًانيد غير أسانيد ميسرة ، وسرقه عبد العزيز بن أَبي رجاء فركبه بأسًانيد أخر ، ثم سرقه سُلَيْمان بن عيسى السجزي ، فأتى بأسًانيد أخر ، أو كما قال الدَّارَقُطنِيّ.

தாவூத் பின் முஹப்பிர் ஹதீஸ் என்றால் என்னவென்றே அறியமாட்டார் என்று இமாம் அஹ்மதும் புகாரியும் கூறியுள்ளார்கள். ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூ சுர்ஆ, நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.
இவர் பலவீனமானவர் மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்றும், இவர் பொய் சொல்பவர் என்றும் இமாம் பக்தாதீ கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ்துறையில் விடப்பட வேண்டியவர் என்றும், இவர் மைஸிரா என்பவரிடமிருந்து ஹதீஸைத் திருடி சம்பந்தமில்லாத வேறு அறிவிப்பாளர் தொடரை இணைத்து விடுவார் என்றும் இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால், பாகம் 8, பக்கம் 445

இட்டுக்கட்டக்கூடிய ஒருவருக்கு ஹதீஸ் கலையில் என்னென்ன வார்த்தைகள் புலங்கப்படுமோ அத்தகைய கருத்துக்கள் இவர் விஷயத்தில் கூறப்படுவதால் இவரை அறிஞர்கள் இட்டுக்கட்டக்கூடியவர் என்று முடிவெடுத்துள்ளனர். எனவே, இந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளத் தகாத, இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும்.

நான்காம் அறிவிப்பு

مسند البزار 18 مجلد كاملا (17/ 189)
9823- حَدَّثَنا مُحَمَّد بن حرب الواسطيّ , حَدَّثَنا مُحَمَّد بن ربيعة , حَدَّثَنا مُحَمَّد بن الحَسَن العوفي , عن مُحَمَّد بن عبد الرحمن , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قال : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : علموا أولادكم الصلاة إذا بلغوا سبعا واضربوهم عليها إذا بلغوا عشرا وفرقوا بينهم في المضاجع.

இந்த அறிவிப்பு அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு முஸ்னத் அல்பஸ்ஸாரில் இடம்பெறுகிறது. இதில் முஹம்மது பின் ஹஸன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.

முஹம்மது பின் ஹஸன் பற்றிய விமர்சனங்கள்

முஹம்மது பின் ஹஸன் என்பவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூஸுர்ஆ, அபூ ஹாதம் ஆகியோர் கூறியுள்ளனர். இவரது ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.
இவரது மனனத்தன்மை குளறுபடியாகி விட்டது என்று இமாம் உகைலீ கூறியுள்ளார்.
இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக்கம் 103

மேற்படி விமர்சனங்களுக்குரிய அறிவிப்பாளர் இடம்பெறுவதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

ஐந்தாம் அறிவிப்பு

இந்த அறிவிப்பு மஃரிஃபத்துஸ் ஸஹாபா எனும் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.அவரிடமிருந்து அவரது மகன் அம்ரு அறிவிக்கிறார்.
இவரைப் பற்றிய ஒரு கருத்தும் அறிவிப்பாளர் தரம் பிரிக்கும் நூற்களில் இடம்பெறவில்லை.
இத்தகைய நிலையில் அறிவிப்பாளர்களை ஹதீஸ் கலையில் ‘மஜ்ஹூலுல் ஹால்’ என்று குறிப்பிடுவர்.
இந்த நிலையில் உள்ள அறிவிப்பாளர் ஏற்றுக்கொள்ளத் தக்கவர் அல்ல என்பதால் இந்த அறிவிப்பும் பலவீனமடைகிறது.

எனவே, இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாக உள்ளதால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளவோ, பிறருக்குச் சொல்லவோ கூடாது.

குழந்தைகளை ஏழு வயதில் தொழக் கட்டளையிட வேண்டும் என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனம் என்றாலும், இன்ன வயது எனத் தீர்மானிக்காமல் குழந்தைகளுக்கு எவ்வளவு சிறுபிராயத்திலிருந்து தொழுகை உட்பட அனைத்து மார்க்கக் காரியங்களையும் கற்றுக் கொடுக்கிறோமோ அது நல்லது தான். ஏனெனில் சிறு வயதில் கற்றுக் கொடுப்பது பசுமரத்தாணி போல் பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்துவிடும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed