பிராணிகளுக்கு ( விலங்குகளுக்கு ) சுவர்க்கம் நரகம் உண்டா?
இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா?
அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? என்று என்னிடம் மாற்று மத அன்பர் கேட்கிறார்.
அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய விசாரணையிருந்து அது வித்தியாசமானது.
மனிதர்களுக்கு பகுத்தறிவு இருப்பதால் அவர்களுக்கு மட்டுமே நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு சொர்க்கம், நரகம் என்ற பரிசோ, தண்டனையோ அளிக்கப்படும்.
ஏனைய உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லாததால் அவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அவற்றை இறைவன் மனம் குளிரச் செய்வான்.
நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)