நபி(ஸல்)  அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா?

முதலாவதாக படைக்கப்பட்டவரா?

ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதேநான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்திமக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும் எச்செய்தியும் நம்பத் தகுந்ததல்லஎன்று இமாம் ஸர்கஸீ, முல்லா அலீ காரி போன்றோர் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு கற்றையைப் பிடித்து, நீ முஹம்மதாக ஆகிவிடு என்று கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும், “ஜாபிரே!ஆரம்பமாக அல்லாஹ் படைத்தது உன்னுடைய நபியின் ஒளி தான்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கும் எந்தஆதாரமும் இல்லை.

நான் ஆதம், தண்ணீர், களிமண் இல்லாமல் இருந்த போதே நபியாக இருந்தேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை சுயூத்தி இமாம் அவர்கள் தன்னுடைய தைலுல் அஹாதீஸில்மவ்லூஆ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதுவும் நபி (ஸல்) அவர்கள் கூறாத அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டசெய்தியாகும். இதைப் பற்றி அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். இது அறிவின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் சரியில்லாததாகும். இதனுடைய பொருளும் அடிப்படையற்றதாகும். இந்த வழிகேடர்கள் நபி (ஸல்) அவர்கள் எல்லாம் படைக்கப்படுவதற்கு முன்பாகவே உருவாகியிருந்தார்கள்என புனைந்து கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அர்ஷைச் சுற்றிலும் ஒளியாக இருந்தார்கள். மேலும், “ஜிப்ரீலே! நான் தான் அந்த ஒளி!” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் என்பது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காட்டுகின்றனர். மேலும் இந்த வழிகேடர்கள் ஜிப்ரீல் குர்ஆனைக் கொண்டு வரும் முன்பே நபி (ஸல்) அதனை மனனம் செய்திருந்தார்கள் எனவும் வாதிக்கின்றனர்.

(நூல்: ஸில்ஸிலதுல் அஹாதீசுல் லயீஃபா, பாகம் 1, பக்கம் 474)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]