துஆ ஏற்கப்படும் நேரம் சம்பந்தமாக…

கீழே உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும்.

(சரியான செய்தி) பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்…

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 521

இச்செய்தி இடம் பெற்ற பல நூல்களில் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.

என்றாலும் முஸ்னத் அஹமதில் சரியான செய்தி வருகிறது.

நோன்பாளி நோன்பு துறக்கும் போது…

பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம். நபி (ஸல்) அவர்கள், பிரயாணத்தை நரக வேதனையின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்கள். எனவே இந்தப் பிரயாணத்தின் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையும் ஏற்கப்படும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

எனினும் கீழ்காணும் ஹதீஸ் பலவீனமானது.

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.

நோன்பாளி நோன்பு துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை.

பிரயாணியின் பிரார்த்தனை

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுமாஜா 3909

இந்த ஹதீஸ் பலவீனமானது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]