தினசரி துஆ மனனம் செய்வோம் – 9
Dua
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ .
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க பிஅன்னீ அஷ்ஹது அன்னக்க அன்த்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த்தல் அஹதுஸ் ஸமதுல்லதீ லம் யலிது வலம் யூலது. வலம் யகுன் லஹு குஃப்வன் அஹ்த்’
(நீயே கடவுள், நீதான் அல்லாஹ் என்பதை நான் உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. நீ தனித்தவன், தேவையற்றவன், நீ யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை என்பதைக் கொண்டு இறைவா! நான் உன்னிடம் கேட்கிறேன்) என்று ஒரு மனிதர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! எதைக் கொண்டு பிரார்த்தித்தால் ஏற்றுக் கொள்ளப்படுமோ, எதைக் கொண்டு கேட்டால் கொடுக்கப்படுமோ அந்த மகத்தான அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அவர் கேட்டுவிட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் ஹஸீப் (ரலி),
நூல்கள்: திர்மிதீ (3397), நஸாயீ (1283)