*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 42* ||

[அத்தியாயம் 5 (அல்மாயிதா – உணவு தட்டு) வசனம் 51-60 வரை]

1) *ஹிஸ்புல்லாஹ்* (حِزْبَ ٱللَّهِ) என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

ஹிஸ்புல்லாஹ் – *அல்லாஹ்வின் கூட்டத்தினர்(அ)படையினர்( அ) குழுவினர்*

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (*அல்லாஹ்வின் கூட்டத்தினர்)* (5:56)

2) *அல்லாஹ் ஒரு சமுதாயத்தை அழித்தால் அவர்களுக்கு வழிதோன்றல்கள் இருப்பார்களா?*

*வழித்தோன்றல்கள் இருப்பதில்லை.*

……ஒரு சமுதாயத்தையும் அழித்துவிட்டு அல்லது வேதனைப்படுத்திவிட்டு, அவர்களுக்குச் *சந்ததியினரை ஏற்படுத்துவதில்லை.(ஹதீஸின் சுருக்கம்)* நூல்கள்: முஸ்லிம் (5177) , அஹ்மத் (3517)

3) *உள்ளங்களில் நோய்(நயவஞ்ச) உள்ளவர்கள் வேதக்காரர்களை நோக்கி செல்ல காரணம் என்ன?*

*அவர்களை பகைத்து கொண்டால் தீங்கு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால்* ( 5:52)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *