அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 145* ||

அத்தியாயம் 15 [*ஸுரா அல் ஹிஜ்ர்(ஓர் ஊரின் பெயர்))* வசனம் 01- 20 வரை]

1 ) *வேதத்துடன் தூதர் வந்த பின்பும்* கூடுதலாக யாரை இறைமறுப்பாளர்கள் கேட்டார்கள்?

*வானவர்களை* ( 15:7)

2 ) நம்பிக்கை கொண்ட சிலர் *அல்லாஹ் நாடிய அளவுக்கு நரகத்தில் இருப்பார்கள்* என்ன காரணம்?

*அவர்களின் பாவங்களுக்காக*

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: நஸாயீ-குப்ரா(11207), தப்ரானீ-அவ்ஸத்(5146)

3 ) அறியாமை காலத்தில் *வானில் நட்சத்திரம் விழுவதைக் கண்டால்* என்ன நினைத்தார்கள்?

அறியாமைக் காலத்தில் வானில் நட்சத்திரம் எறியப்பட்டதைக் கண்டால், *”இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார்”* என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம் (4487), திர்மிதீ (3148), அஹ்மத் (1785).

4 ) *ஜோதிடம் சொல்பவன் முன்கூட்டியே கூறிய செயல்கள் சில நேரங்களில் நடைபெறுவது எப்படி?*

ஷைத்தான்கள் முன்பு வானுலகின் செய்திகளை ஒட்டுக்கேட்டு, சோதிடர்களுக்கு அறிவித்தனர். சோதிடர்கள் இந்த *உண்மைச் செய்திகளுடன்* பல பொய்களைக் கலந்து மக்களிடம் கூறினர்.

ஆனால், குர்ஆன் அருளப்பட்ட பின்பு, ஷைத்தான்களின் ஒட்டுக்கேட்டல் முழுமையாகத் **தடைசெய்யப்பட்டது**. எனவே, தற்போது சோதிடர்களின் “*சரியான கணிப்புகள்*” என்பது அவர்களின் *ஊகங்கள்* அல்லது *தற்செயல் நிகழ்வுகளே!*

*”அவர்கள் (சோதிடர்கள்) உள்ளது உள்ளபடி சொல்வது உண்மை. ஆயினும், அதில் பொய்யைக் கலந்து கூடுதலாகக் கூறுகின்றனர்”* (முஸ்லிம் 4487).

5 ) *யாரை தீப்பிழம்பு துரத்தும்* என அல்லாஹ் கூறுகிறான்?

*வானுலகின் செய்திகளை மறைந்திருந்து ஒட்டுக்கேட்க முயலும் ஒவ்வொரு ஷைத்தானையும்* பிரகாசமான தீப்பிழம்பு துரத்தும்.

*”யார் மறைந்திருந்து செவியேற்கிறானோ, அவனைப் பிரகாசமான தீப்பிழம்பு துரத்தும்”* (15:18).
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

 

 

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *